தமிழக செய்திகள்

18 வயது தாண்டிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தவேண்டும் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

கல்லூரிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளிகளிலும் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. வேறு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமெனில் அனுமதி பெற வேண்டும். கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவருந்த அனுமதிக்கக் கூடாது.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகிறது. கல்லூரிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு