தமிழக செய்திகள்

டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய யோகா போட்டியில் டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தென்காசி:

கரூர் அஜந்தா மகாலில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் சார்பில், தேசிய யோகா ஸ்போர்ட்ஸ் கிராண்ட் சாம்பியன்ஷிப்-2023 என்ற தேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர்கள் சாய் கணேஷ், முகிலன் ஆகியோர் முதலிடத்திலும், மாணவர் தருண் பிரசாத், 5-ம் வகுப்பு மாணவர் முகமது அப்துல்லா, 6-ம் வகுப்பு மாணவர் இஷாந்த் ராகவன் 2-ம் இடத்திலும், 4-ம் வகுப்பு மாணவர் ஆபீக் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்