தமிழக செய்திகள்

கூடுதல் பஸ் இயக்ககோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

கூடுதல் பஸ்களை இயக்ககோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சொக்கம் பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி செய்து தர கோரி பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளிக் கல்லூரி மாணவர்கள் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை 9 மணிக்கு சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.

பின்னர் சம்பவ இடத்துக்குவந்த போலீசார், பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு