தமிழக செய்திகள்

காவிரி கூட்டு குடிநீர் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

காவிரி கூட்டு குடிநீர் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

 தரகம்பட்டியில் உள்ள கடவூர் வட்டார அலுவலகத்தில் காவிரி கூட்டு குடிநீர் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி தலைமை தாங்கினார். கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடவூர் ஒன்றிய பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளில் குறைபாடுகள் இருப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, அனைத்து பகுதிகளுக்கும் தேவையான குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதில், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் நந்தினிதேவி, கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு