தமிழக செய்திகள்

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்

சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம் நடந்தது.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத மூல நட்சத்திர வைபவம் நேற்று நடந்தது. இதன் ஒரு பகுதியாக உலக நன்மைக்காகவும், சகல கிரக தோஷ நிவர்த்திக்காகவும் சுதர்சன ஹோமம் நடந்தது. ஹோமத்தை தொடர்ந்து கோ பூஜையும், சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றது. மதியம் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து கோவிலின் பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் கூறுகையில், 'புரட்டாசி மாதம் முழுவதும் புரட்டாசி மஹோத்சவ விழா சிறப்பாக நடைபெறுகிறது. நாளை (இன்று) புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி காலையில் மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு சனிக்கிழமையும் விழா சிறப்பாக நடைபெற உள்ளது' என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்