தமிழக செய்திகள்

ஓடும் காரில் திடீர் தீ

ஓடும் காரில் திடீர் தீ தீப்பிடித்து எரிந்தது.

திங்கள்சந்தை

திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் பென்னி சாலமன் (வயது45). இவர் நேற்று முன்தினம் தனது சொகுசு காரில் நாகர்கோவில் சென்று விட்டு இரவு 9 மணி அளவில் இரணியல் வள்ளி ஆற்றின் கரை பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரின் முன்பக்கம் என்ஜின் பகுதியில் புகை வருவது கண்டு காரை ஓரமாக நிறுத்தினார். அப்போது காரில் தீப்பற்றி எரிந்தது. உடனே பொதுமக்கள் தண்ணீர் விட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

அதே சமயம் திங்கள் நகர் தீயணைப்புநிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் ஜான்வின்ஸ் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்