தமிழக செய்திகள்

ஓடும் காரில் திடீர் தீ

பழனியில், ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் கொழுமம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். நேற்று காலை இவர், சொந்த வேலை காரணமாக தனது காரில் பழனிக்கு வந்தார். பழனி-திண்டுக்கல் சாலையில், எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிதுநேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்துக்கு வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் தீப்பற்றி எரிந்ததில், காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. ஓடும் காரில் திடீரென தீப்பிடித்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்