தமிழக செய்திகள்

செஞ்சி அருகே கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செஞ்சி அருகே கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா.

தினத்தந்தி

செஞ்சி, 

செஞ்சி வட்டம் பாலப்பாடி கூட்டுரோட்டு செம்மேடு தனியார் சர்க்கரை ஆலை எதிரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்புக்கான கொள்முதல் விலைய உயர்த்திட வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் குண்டு ரெட்டியார் தலைமை தாங்கினார். ஆலை மட்ட தலைவர் தினேஷ்குமார், பொருளாளர் விநாயகம் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணை தலைவர் மாதவன், செஞ்சி வட்ட தலைவர் சிவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். இதில் கோட்ட நிர்வாகிகள் ஏழுமலை, வெங்கடேசன், நரசிம்ம ராஜன், சீத்தாராமன், ராஜேந்திரன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துரைராஜ் நன்றி கூறினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை