தமிழக செய்திகள்

பள்ளிபாளையம் அருகேகாவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி

பள்ளிபாளையம்:

அரியலூர் மாவட்டம் பார்ப்பனன்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே எஸ்.பி.பி. காலனி கிழக்கு தொட்டிபாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மனைவி, குழந்தைகள் பார்பனன்சேரியில் வசித்து வருகின்றனர். சதீஷ்குமார் தனியாக வீடு எடுத்து கிழக்கு தொட்டிபாளையத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவருடைய தாய் வேம்பு அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது