சென்னை
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177. 25 டிஎம்சி நீரை ஒதுக்கிட்டு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பு உள்ளது, கர்நாடகாவில் குடிநீர் தேவை அதிகம் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
(2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இது 14. 75 டிஎம்சி தண்ணீர் குறைவு, தமிழகத்திற்கான காவிரி நீரை 132 டி.எம்.சி-யாக குறைக்க கர்நாடகம் மேல்முறையீடு செய்து இருந்தது)
இந்த தீர்ப்பால் கர்நாகாவில் மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் விதித்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் பெங்களூருவின் தண்ணீர் தட்டுப்பாடு பெருமளவில் குறையும் என கூறப்படுகிறது.
கூடுதல் நீரை கர்நாடகத்திற்கு ஒதுக்கிய சுப்ரீம் கோர்ட்டிற்கு கர்நாடக சட்ட கவுன்சில் நன்றி தெரிவித்து உள்ளது. காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக கர்நாட்க முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.
காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். தமிழகத்தை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு பார்க்கக் கூடாது என தமிழக விவசாயிகள் கூறி உள்ளனர்.
காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிரானது காவிரி வழக்கில் மேல்முறையீடு செய்யமுடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; மேல்முறையீடு செய்ய அனுமதி வேண்டும் என மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.
தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன் கூறி உள்ளார்.
தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது;
தமிழகத்தின் உரிமை பாதிக்கப்பட்டிருக்கிறது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிமுக அரசு காவிரி நதி நீர் பங்கீடு வழக்கை முறையாக வாதாடவில்லை.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் கூறி உள்ளார்.
காவிரி வழக்கில் தமிழகத்திற்கு தண்ணீர் குறைக்கப்பட்டது மனவருத்தம் தருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.