தமிழக செய்திகள்

"சின்னக் கலைவாணர் விவேக் சாலை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தினத்தந்தி

சென்னை,

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் அந்த கோரிக்கையை 5 நாட்களில் மின்னல் வேகத்தில் நிறைவேற்றி உத்தரவிட்டார்.

அதன் படி, திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த பத்ம ஸ்ரீ விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அண்மையில் ஆணை வெளியிட்டது.

இந்நிலையில், நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள சாலை சின்னக் கலைவாணர் விவேக் சாலை என மாற்றப்பட்ட நிலையில் பெயர் பலகையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை