தமிழக செய்திகள்

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் அரசுமுறை பயணமாக இன்று காலை 10.35 மணியளவில் சென்னை வந்தார்.

சென்னை,

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று ஒருநாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 7.50 மணியளவில் சென்னை புறப்பட்ட பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்துக்கு காலை 10.35 மணிக்கு பிரதமர் மோடி வந்து சேர்ந்தார்.

அங்கிருந்து காலை 10.40 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு காலை 11 மணியளவில் வந்தார். ஐஎன்.எஸ் கடற்படை தளம் வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல். முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அவர் அங்கிருந்து காலை 11.05 மணியளவில் கார் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, சாலைமார்க்கமாக தீவுத்திடல், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்டிரல், ரிப்பன் மாளிகை வழியாக சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு காலை வந்தார்.

பிரதமர் வரும் வழியில் அவருக்கு 5 இடங்களில் பா.ஜ.க., அ.தி.மு.க. சார்பில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் நின்ற மக்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கை அசைத்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்