தமிழக செய்திகள்

தமிழக - கேரள அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

விபத்தில் தமிழக, கேரள அரசு பேருந்து ஓட்டுநர்கள் பலத்த காயமடைந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தினத்தந்தி

மார்த்தாண்டம்,

தமிழக அரசு பேருந்து ஒன்று களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு  சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.

இந்த இரு பேருந்துகளும் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தமிழக, கேரள அரசு பேருந்து ஓட்டுநர்கள் பலத்த காயமடைந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மேலும், இரு பேருந்துகளில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

அவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது