தமிழக செய்திகள்

பள்ளிபாளையத்தில் டாக்சி டிரைவர்கள் போராட்டம்

நாமக்கல்லில் டாக்சி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

பள்ளிபாளையம்:

நாமக்கல்லில் டாக்சி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.

பள்ளிபாளையத்தில் உள்ளூர் கால் டாக்சி டிரைவர்களுக்கும், ஈரோட்டில் இருந்து வரும் கால் டாக்சி டிரைவர்களுக்கும் ஆட்களை ஏற்றுவதில் பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது, இந்த பிரச்சினை தொடர்பாக நாங்கள் பேசுவதை விட, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பேசினால்தான் நன்றாக இருக்கும். எனவே வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் சென்று பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று போலீசார் கூறியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ஈரோட்டில் இருந்து வரும் கால் டாக்சி டிரைவர்கள் போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் பள்ளி பாளையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு