தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

வேலூரில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் சத்துவாச்சாரி பகுதியில் மது, சாராய விற்பனையை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சத்துவாச்சாரி இந்திராநகரில் நின்றிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அவர் பாக்கெட்டில் 20 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில், வாலிபர் வேலூர் ஓல்டுடவுன் முருகன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்ராஜா மகன் அவினாஷ் (வயது 21) என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT