தமிழக செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பாவூர்சத்திரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லத்தாயார்புரத்தை சேர்ந்தவர் அருள் தாமஸ் மகன் ஈஸ்டர் ராஜ் (வயது 34). இவர் டிப்ளமோ படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவருக்கு செல்வமெர்சி என்ற மனைவியும், 2 வயதில் மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மருதடியூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் நேற்று முன்தினம் ஈஸ்டர் ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது