தமிழக செய்திகள்

சனி பிரதோஷ வழிபாடு

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருக்கடையூர்;

திருக்கடையூர் அருகே ஆக்கூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. சோழ மன்னர்களில் ஒருவரும் 63 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கட் சோழ மன்னரால் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் ஒன்றான இந்த கோவிலில் சாமி தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தான்தோன்றீஸ்வரர், நெடுங்கண்ணி அம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்