தமிழக செய்திகள்

கோவில் கும்பாபிஷேக விழா

ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் கொட்டாரக்குறிச்சி குளக்கரை இளையநயினார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் கொட்டாரக்குறிச்சி குளக்கரையில் இளையநயினார் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவராக முருகன்- வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கின்றார். இக்கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடந்தது.

விழாவையொட்டி காலையில் யாகசாலை பூஜை, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் விமானத்துக்கும், சுவாமி-அம்பாளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு