தமிழக செய்திகள்

தமிழகத்தில் இதுவரை ரூ.500 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது - அமைச்சர் சேகர் பாபு தகவல்

தமிழகத்தில் இதுவரை ரூ.500 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை வடபழனியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திருப்பூர் ரங்கநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமான இடம், ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடம், திருப்போரூர் அருள்மிகு முருகன் கோவிலுக்குச் சொந்தமான இடம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான இடம் என தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் ரூ.500 கோடி மதிப்பிலான 79 ஏக்கர் கோவில் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த கால அரசானது எந்த வித செயல்பாடுகளும் இல்லாமல் இருந்த அரசு என்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையே ஒரு சான்று ஆகும். கோவில் நிலங்களை மீட்கும் பணி தொடரும். கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு