தமிழக செய்திகள்

தேவாரம் அருகே பயங்கரம்: கட்டையால் அடித்து பெண் படுகொலை: சிறுவன் கைது

தேவாரம் அருகே கட்டையால் அடித்து பெண் படுகொலை செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தே.மீனாட்சிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 65). திருமணமாகாதவர். இவருக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே ஆடு விற்றது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறுவன் ஆத்திரம் அடைந்தான்.

அப்போது அந்த சிறுவன் அங்கிருந்த கட்டையை எடுத்து அழகம்மாளை சரமாரியாக தாக்கினான். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். ஆடு விற்ற சம்பவத்தில் பெண்ணை கட்டையால் அடித்து சிறுவன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்