தமிழக செய்திகள்

பள்ளி மாணவரின் உடல் கரை ஒதுங்கியது

ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பள்ளி மாணவரின் உடல் கரை ஒதுங்கியது

விழுப்புரம்

விழுப்புரம் வா.பாளையம் மஞ்சாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அங்கப்பன் மகன் லோகேஷ்(வயது 17). இவர் விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 14-ந் தேதி காலை இவர் தனது நண்பர்கள் சிலருடன் ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்று பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்று வெள்ளத்தில் லோகேஷ் அடித்துச்செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இந்நிலையில் லோகேசின் உடல் நேற்று காலை விழுப்புரம் அருகே மரகதபுரம் தென்பெண்ணையாற்றில் கரை ஒதுங்கியது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று லோகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்