தமிழக செய்திகள்

இந்துக்களின் நெடுநாள் கனவு நிறைவேறும் நாள் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

அயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்த விழாவிற்கு பல்வேறு இந்து மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம், வரலாற்றுச் சிறப்பு மிக்க "அயோத்தியில் ராமர் கோவில்" கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு