தமிழக செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

வேலூர் சித்தேரியில் வீட்டின் கதவை உடைத்து நகை, வெள்ளி பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தங்க நகைகள் திருட்டு

வேலூர் சித்தேரி குமரவேல்நகர் ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் நரேஷ்குமார் (வயது 34). இவர் மகா சிவராத்திரி அன்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது பீரோ திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டின் பின்பக்க கதவை மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் இருந்த 11 பவுன் நகை, கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து நரேஷ்குமார் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

வாலிபர் கைது

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சித்தேரி ஆஞ்சநேயர்கோவில் தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்