தமிழக செய்திகள்

ஓரின சேர்க்கைக்கு அழைத்து வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்-2 பேர் கைது

புளியங்குடியில் ஓரின சேர்க்கைக்கு அழைத்து வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தினத்தந்தி

புளியங்குடி:

புளியங்குடியில் ஓரின சேர்க்கைக்கு அழைத்து வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதிய செயலி

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது சல்போனில் புதிய செயலியை டவுன்லோடு செய்து, அதில் இணைந்து காண்டார்.

இதையடுத்து அந்த வாலிபரை தொடர்பு கொண்ட மர்மநபர்கள், புளியங்குடி பகுதியில் தியேட்டர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு வரும்படியும், அவ்வாறு வந்தால் ஓரின சேர்க்கையில் ஈடுபடலாம் என்றும் தெரிவித்தனர்.

வாலிபர் மீது தாக்குதல்

இதையடுத்து ஓரின சேர்க்கை ஆசையில் வாலிபரும் அந்த பகுதிக்கு சென்றார். அப்போது, அங்கு நின்ற 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த வாலிபரிடம் நெருங்கி பழகினர். திடீரன்று அந்த கும்பல், வாலிபரை தாக்கி அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்தனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டிச் சென்றனர்.

தொடர்ந்து அந்த வாலிபருக்கு போன் செய்து மர்ம கும்பல் தொல்லை காடுத்தனர். இதனால் விரக்தி அடைந்த அந்த வாலிபர், வேறு வழியின்றி நடந்த சம்பவம் குறித்து புளியங்குடி போலீசில் புகார் செய்தார்.

2 பேர் கைது

இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி, புளியங்குடியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 23), சிவா (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு