சிதம்பரம்,
சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் உலகோடு போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தற்போது தனது டுவிட்டரில், இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு என்று பதிவிட்டுள்ளார்.