சென்னை,
தமிழக மக்களின் உணர்வுகளையும் பேரவையின் இறையாண்மையையும் மதிக்க தமிழ்நாடு கவர்னர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அரசியல் சட்டம் மீது நம்பிக்கையின்றி கவர்னர் செயல்படுவது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று கூறியுள்ள அவர், சர்க்காரியா கமிஷன் பரிந்துரை, சம்ஷேர்சிங் வழக்கின் தீர்ப்பை கவர்னர் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.