தமிழக செய்திகள்

ரூ.4 லட்சத்தில் தோப்பு ஊருணி தூர்வாரப்பட்டது

பாசிப்பட்டினத்தில் ரூ.4 லட்சத்தில் தோப்பு ஊருணி தூர்வாரப்பட்டது/

தொண்டி, 

திருவாடானை அருகே கலியநகரி ஊராட்சி பாசிப்பட்டினம் கிராமத்தில் தோப்பு ஊருணி அல்லித்தாமரை செடிகள் மண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து ஊராட்சி தலைவர் நூருல் அமீன் முயற்சியால் ராமநாதபுரம் நீர்வடி பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை பயன்படுத்தி தோப்பு ஊருணியில் படர்ந்திருந்த தாமரை செடிகள் முழுவதுமாக அகற்றப்பட்டன. ஊருணியும் தூர்வாரப்பட்டது.

தற்போது அல்லித்தாமரை செடிகள் இன்றி ஊருணி தண்ணீர் நிறைந்து காணப்படுவது பார்க்க அழகாக இருக்கிறது. தற்போது பொதுமக்கள் அந்த ஊருணியை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு