தமிழக செய்திகள்

இந்து முன்னணியினர் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்

இந்து முன்னணியினர் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில், 1.25 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர். திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட இந்து முன்னணியினர் பலர் பங்கேற்று காப்பு கட்டி கொண்டனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் மனோஜ்குமார் தலைமையில் மாவட்ட பேச்சாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் காப்பு கட்டினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்