சென்னை:
கனிமொழி எம்.பி. பற்றி அ.தி.மு.க. மாநாட்டில் அவதூறு பாடல் பாடியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகளிர் ஆணையத்தில் திமுக மகளிரணி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் நடந்த கலைநிகழ்ச்சிகளில் கனிமொழியை விமர்சித்து அவதூறாக பாடல் பாடியுள்ளனர். தரக்குறைவான பாடலை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கைதட்டி சிரித்ததாகவும் மகளிர் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.