ஒரத்தநாடு:
ஒரத்தநாட்டை அடுத்துள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று இந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கண்ணுகுடி மேற்கு கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்கிற தினேஷ்குமார்(வயது 36) என்பவர் திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்டியல் உடைத்து பணம் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தினேஷ்குமார் மீது ஏற்கனவே பட்டுக்கோட்டை, மன்னார்குடி, மதுக்கூர், ஒரத்தநாடு ஆகிய போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.