தமிழக செய்திகள்

பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மேலகிருஷ்ணன்புதூர்:

பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

சுசீந்திரம் ஆஞ்சனேயர் தெருவை சேர்ந்தவர் அல்போன்ஸ் மேரி (வயது 35). இவருடைய கணவர் ராமதாஸ் இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து அல்போன்ஸ் மேரி கூழ் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வியாபாரம் முடித்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது லெவஞ்சிபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (40) என்பவர் வந்து தகராறு செய்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அல்போன்ஸ் மேரியை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சதீஷ்குமாரை கைது செய்தனர். அதே சமயம் சதீஷ்குமார் ஒரு புகார் கொடுத்தார். அதில் சுசீந்திரத்தில் தன்னை ஆரல்வாய்மொழி கணேசபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (23) என்பவர் மரக்கட்டையால் தாக்கியதாக குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது