தமிழக செய்திகள்

பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்

குருவிமலை பகுதியில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைக்க உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. வராததால் பா.ஜ.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டு பகுதியை சேர்ந்த குருவிமலை வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை தேவை என 46-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் கயல்விழி சூசையப்பர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் பகுதி நேர ரேஷன் கடையை திறக்க அனுமதி அளித்தது.

அதன்படி குருவிமலை பகுதியில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைக்க உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர் வருவதாக இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் பா.ஜ.க. கட்சியினர் கவுன்சிலர் கயல்விழி சூசையப்பர் தலைமையில் காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் வாழையிலை போட்டு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு