தமிழக செய்திகள்

குளவி கொட்டி மூதாட்டி பலி

செய்யாறு அருகே குளவி கொட்டி மூதாட்டி பலியானார்.

செய்யாறு,

செய்யாறு அருகே குளவி கொட்டி மூதாட்டி பலியானார்.

செய்யாறு தாலுகா வடதின்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கனகா (வயது 68). இவர், நேற்று முன்தினம் அதே கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது சாலையோர புதரில் இருந்த குளவிகள் பறந்து வந்து மூதாட்டி கனகாவை கொட்டியது. வலியால் துடித்த அவரை உடன் வந்தவர்கள் மீட்டு கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கனகாவின் மகன் விஜயபிரகாஷ் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்