தமிழக செய்திகள்

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.352 உயர்ந்தது

இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.352 உயர்ந்ததுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஜூலை மாத இறுதியில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை 41 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.

கடந்த மாதம் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தும் ஏற்றத்துடனும் காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து ரூ.39,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்று ரூ.4,916க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.44 உயர்ந்து ரூ.4,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று 70,300 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை ரூ 1,200 உயர்ந்து 71,500 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்