தமிழக செய்திகள்

முகூர்த்த நிகழ்ச்சி அதிகம் உள்ளதால் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

முகூர்த்த நிகழ்ச்சி அதிகம் உள்ளதால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.850-க்கு விற்பனையானது.

பூக்கள் ஏலம்

கரூர் மாவட்டம் நொய்யல், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், பேச்சிப்பாறை, நடையனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் குண்டுமல்லி, முல்லை, காக்கரட்டான், சம்பங்கி, ரோஜா, அரளி, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர். பூக்கள் பறிக்கும் நிலைக்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் நொய்யல், புன்னம் சத்திரம், வேலாயுதம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

விலை கிடுகிடு உயர்வு

இந்தநிலையில் வரத்து குறைவாலும், முகூர்த்த நாட்கள் அதிகம் உள்ளதாலும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்விவரம் வருமாறு:- கடந்த வாரம் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.450-க்கு விற்றது தற்போது ரூ.850-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70-க்கு விற்றது ரூ.140-க்கும், அரளி கிலோ ரூ.120-க்கு விற்றது ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கு விற்றது ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.700-க்கு விற்றது ரூ.1,000-த்திற்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கு விற்றது ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கு விற்றது ரூ.1,000-க்கும், காக்கரட்டான் ரூ.300-க்கு விற்றது ரூ.500-க்கும் விற்பனையானது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு