தமிழக செய்திகள்

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு

அரக்கோணம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 68). கடந்த சில நாட்களாக பெய்த மழையால் இவரது குடிசை வீட்டின் சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த நாகம்மாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்