தமிழக செய்திகள்

ரத்த வாந்தி எடுத்து தொழிலாளி சாவு

ஆம்பூர் அருகே ரத்த வாந்தி எடுத்து தொழிலாளி சாவு

தினத்தந்தி

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் உள்ள வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 45), கூலித்தொழிலாளி.

இவர் இன்று காலை திடீரென ரத்த வாந்தி எடுத்தார். அதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை, மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மகேந்திரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உமராபாத் போலீசார் விரைந்து வந்து மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது