தமிழக செய்திகள்

தொழிலாளி அடித்துக்கொலை

அய்யம்பேட்டை அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தடி வருகின்றனர்.

கறிவிருந்து

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பெருமாக்கநல்லூர் தெற்கு குடியானத்தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 58). கூலி தொழிலாளி. இவருடைய உறவினர்கள் சாலியமங்கலத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் கிடா வெட்டு பூஜை நடத்தினர்.

அப்போது அங்கு நடந்த கறி விருந்தில் சங்கரின் மகன் கார்த்திக்கும், அவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த அருண்(25) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அடித்துக்கொலை

அப்போது அருகில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் பெருமாக்கநல்லூர் கிராமத்திற்கு வந்து விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருதரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. கார்த்திக்கு ஆதரவாக பேசிய சங்கரை, அருண் மற்றும் அவரது உறவினர் செல்லப்பா (48) ஆகிய 2 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

2 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கர் உடலை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கபன அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அருண் மற்றும் செல்லப்பாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு