தமிழக செய்திகள்

தங்க சங்கிலி திருடிய வாலிபர் சிக்கினார்

கம்பத்தில் ஜவுளி கடை ஊழியரிடம் தங்க சங்கிலி திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கம்பம் சுக்காங்கல்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 30). ஜவுளி கடை ஊழியர். இவர் கடந்த 24-ந்தேதி கம்பம் வனத்துறை அலுவலகம் அருகேயுள்ள சின்ன வாய்க்கால் மதகு பகுதியில் குளிக்க சென்றார். அப்போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 1 பவுன் சங்கிலியை கழற்றி சட்டை பையில் வைத்திருந்தார். அந்த சட்டையை வாய்க்கால் கரையில் வைத்துவிட்டு குளித்தார். அப்போது அங்கு வந்த சர்ச் தெருவை சேர்ந்த சுந்தர் (25) என்பவர் கார்த்திக் ராஜாவின் சட்டை பையில் இருந்த தங்க சங்கிலியை திருடி சென்றார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசில் கார்த்திக் ராஜா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்