தமிழக செய்திகள்

கோவிலில் உண்டியல் பணம் திருட்டு

நித்திரவிளை அருகே சிவன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு

கொல்லங்கோடு, 

நித்திரவிளை அருகே உள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் கோதேஸ்வரம் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலையில் பூசாரி வந்த போது கோவிலின் முன்பக்கம் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. இரவில் யாரோ மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்