தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன் படி, நேற்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில். பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலையில் 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.40 ஆகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.68.40 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது