தமிழக செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; விசாரணை ஆணையம் பதவிக்காலம் நீட்டிப்பு

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கான,கால அவகாசம் வருகின்ற 22 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில்,அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு ,அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு