தமிழக செய்திகள்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முப்பெரும் விழா

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

அரியலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சங்க கொடியேற்றம், அலுவலகம் திறப்பு, நிர்வாகிகள் கூட்டம் என முப்பெரும் விழா நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நகரத்தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். நகர செயலாளர் பாரி, பொருளாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அரியலூர் அண்ணா சிலை அருகே உள்ள கொடிக்கம்பத்தில் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து, நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். மாநில துணைத்தலைவர் தனஞ்ஜெயன், இணை செயலாளர் அமுதன், மாவட்ட துணை தலைவர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்