தமிழக செய்திகள்

திருநெல்வேலி: லுங்கியால் கழுத்தை நெரித்து தொழிலாளி படுகொலை

திருநெல்வேலியில் கட்டிட தொழிலாளி ஒருவரின் மனைவி, குடும்ப தகராறு காரணமாக மேலப்பாட்டம் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

தினத்தந்தி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெரியபாளையம் பகுதியை சேர்ந்த வெள்ளபாண்டி (வயது 27), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சுதா. குடும்ப தகராறு காரணமாக சுதா மேலப்பாட்டம் கொம்மந்தனூர் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த பிரச்சினை தொடர்பாக சுதாவின் தம்பியான வெல்டிங் தொழிலாளி பெருமாளை(21) அழைத்து பேசிய வெள்ளபாண்டி திடீரென தனது நண்பர் மதுபாலனுடன் சேர்ந்து, பெருமாளை லுங்கியால் கழுத்தை நெரித்துக் கொன்று உடலை அங்குள்ள 400 அடி ஆழ கல்வெட்டான் குழியில் வீசினார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை