தமிழக செய்திகள்

டயர் வெடித்ததில் தென்னை மட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து...!

நிலக்கோட்டை அருகே டயர் வெடித்து லாரி கவிழந்த விபத்தில் 3 பேர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள எ.ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் காசிவிசுவநாதன் (வயது 27). இவர் நிலக்கோட்டை சுற்றி உள்ள தென்னை மட்டைகளை வாங்கி இப்பகுதியிலுள்ள கயிறு தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்வது வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அணைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தென்னை மட்டைகளை ஏற்றிக்கொண்டு விளாம்பட்டி - மட்டப்பாறை சாலையில் பாண்டியராஜபுரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக லாரி டயர் வெடித்தது தலைகுப்புற லாரி கவிழ்ந்தது.

இதில் லாரியின் மேல் புறத்தில் அமர்ந்திருந்த எ.ஆவாரம்பட்டியைச் சேர்ந்த மணி, லட்சுமி, செல்வி, மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

லாரி டிரைவரான காசிவிஸ்வநாதன் எந்த விதமான காயமின்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்த விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு