தமிழக செய்திகள்

திருப்பூர்: மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது

மூதாட்டி அணிந்திருந்த சங்கிலியை பறித்து சென்றதாக வாலிபர் ஒப்புக்கொண்டார்.

தினத்தந்தி

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம், கருக்கன்காட்டுபுதூரை சேர்ந்தவர் தேவி (வயது 72). கடந்த 4-ந் தேதி இவர் அணிந்திருந்த 1 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பறித்து சென்றார். இது குறித்து, பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.

நேற்று, ஆதியூர் பிரிவில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஈரோடு நொச்சிக்காட்டுவலசில் வசித்து வரும், கோவையை சேர்ந்த ஜீவா என்கிற ராம்ராஜ் (32) என்பதும், மூதாட்டி அணிந்திருந்த சங்கிலியை பறித்து சென்றதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது