புதுடெல்லி,
விழுப்புரம் அருகே எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல் அமைச்சர் பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் - சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது.
இக்கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இச்செயலில் ஈடுபட்டுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் எனவும் முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.