தமிழக செய்திகள்

ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தமிழக அரசு

வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் செப்டம்பர் 15 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய விவரங்களை காணலாம்.

*தமிழகத்தில் திட்டமிட்டபடி செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்படும்.

*ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

*வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து தொடரும்

*கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள், தனியார் கல்லூரி விடுதிகள் இயங்க அனுமதி

* விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, கொண்டாட தடை விதிப்பு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு