சென்னை
தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* வானூர்திப் பூங்கா, பாதுகாப்பு உபகரண உற்பத்திக்கான தொழில் வழித்தடம் அமைக்க சிறப்புக்கவனம் செலுத்தப்படும்.
* நீர்வள, நிலவள இரண்டாம் கட்ட திட்டத்திற்காக ரூ. 655.29 கோடி நிதி ஒதுக்கீடு.
* தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
* இலங்கைத் தமிழ் அகதிகளின் நலத் திட்டங்களுக்கு ரூ.109. 42 கோடி ஒதுக்கீடு.
* சமூக நலத்துறைக்கான தமிழக பட்ஜெட்டில் ரூ.5,611.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நீர்வள ஆதாரத்தை மேம்படுத்த ரூ.5,127 கோடி ஒதுக்கீடு.
* நீர்வளத்தை மேம்படுத்த ரூ.1000 கோடியில், தடுப்பணைகள் கட்டப்படும்.
* 110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு.