தமிழக செய்திகள்

உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி

உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ஆண்டுதோறும் டிசம்பர் 23-ந் தேதி (இன்று) தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றும் விதாமக பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி தேசிய விவசாயிகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"உழந்தும் உழவே தலை" உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த "தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை" அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு